திருக்கோவிலூர் அருகே உள்ள ஆற்காடு கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை என்பவரின் மூத்த மகள் வித்யாஸ்ரீ இரண்டு கைகளும் பிறவியிலேயே இல்லாதவர்.17 வயது வித்யாஸ்ரீ திருக்கோவிலூர் டேனிஸ் மிஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார் 2 கைகளும் இல்லாவிட்டாலும் மனம் சோர்வடையாமல் சிறப்பாக படிக்கும் மாணவியாகத் திகழ்ந்தார்செவ்வாய்க் கிழமையன்று அவர் டேனிஷ் மிஷன் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதினார்.
கைகள் இல்லாததால் அவர் கால் விரல்களில் இடையில் பேனாவை வைத்து தரையில் அமர்ந்து தேர்வு எழுதினார். அரசு அவருக்கு ஒருமணி நேரம் கூடுதலாக நேரம் ஒதுக்கியது. ஆனாலும் அவர் 3 மணி நேரத்திற்குள் தேர்வை எழுதி முடித்தார்"கடந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை கால்களால் எழுதி 329 மதிப்பெண்கள் பெற்றேன். தற்போது 12-ம் வகுப்பில் வரலாறு பிரிவை தேர்வு செய்து படித்து வந்தேன். 1200க்கும் 1100 மதிப்பெண் குறையாமல் எடுப்பேன். தேர்வில் வெற்றிப் பெற்று வருங்காலத்தில் உயர் கல்வி படித்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாவதே என் லட்சியம். நான் உயர் கல்வி படிக்க அரசு உதவி செய்ய வேண்டும்" என்று மாணவி வித்யாஸ்ரீ கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment