டெல்லி: இந்திய அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்தும் முடிவுக்கு வந்துள்ளன. சில தினங்களுக்கு முன்புதான் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 3 வரை உயர்த்தி மக்களை அழ வைத்தன. இந்த விலை உயர்வு பல்வேறு மட்டத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இருந்தாலும் டீஸல் மற்றும் எரிவாயுவை மானியத்தில் தருவதால் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறிவந்தன எண்ணெய் நிறுவனங்கள்.
இப்போதைக்கு டீஸல் விலையை உயர்த்தக் கூடாது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டீஸல், எரிவாயு விலையை உயர்த்தினால் வரும் 5 மாநிலத் தேர்தல்களை அது பாதிக்கும் என்று காங்கிரஸ் கருதுகிறது.
டீஸல் விலை உயர்வு சாத்தியமில்லை என்பதால், மீண்டும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 1 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.பெட்ரோல் விலையை ஒரே ஆண்டில் இதுவரை எட்டு முறை உயர்த்தி சாதனைப் புரிந்துள்ளன எண்ணெய் நிறுவனங்கள். இப்போது விலை உயர்வை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதால் திடீர் திடீரென எந்த அறிவிப்புமின்றி உயர்த்திக் கொண்டு வருகின்றன.
January 07, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
- மின் கட்டணம் செலுத்த புதிய முறை
- சிதம்பரத்தில் பண்டிகையொட்டி கூட்ட நெரிசல் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
- வரும் 7ம் தேதி தனியார் பஸ்கள் ஓடாது : போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
- இறப்பு செய்தி

No comments:
Post a Comment