ஹைதராபாத் மக்கா மசூதி மற்றும் சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்புகளில் முக்கியக் குற்றவாளியான சுவாமி ஆசிமானந்தின் வாக்குமூலத்தை ஊடகங்களுக்கு சிபிஐ வேண்டுமென்றே வெளியிட்டுள்ளது என்று குற்ம் சாட்டி ஆர்.எஸ்.எஸ். சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆசிமானந்தின் வாக்குமூலத்தை வெளியிட்டிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் ஆசிமானந்தின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்றெண்ணி வெளியிடப்படுள்ளது என்றும் ஆசிமானந்துக்கு நியாயமான விசாரணை மறுக்கப்படுவதாகவும் ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய நோட்டீஸில் கூறியுள்ளது.அதிகாரிகள் தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்தனர் என்றும் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தினார்கள் என்றும் சிபிஐயின் விசாரணை நேர்மையற்றதாக இருந்தது என்றும் ஆர்.எஸ்.எஸ். அந்த நோட்டீஸில் கூறியுள்ளது.குஜராத் மாநிலம் டாங்க்ஸ் மாவட்டத்தில் உள்ள வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் தலைவரான சுவாமி ஆசிமானந்த், வெள்ளிக் கிழமையன்று மாஜிஸ்டிரேட் முன்னிலையில், 2007ஆம் ஆண்டு நடைபெற்ற சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பைக்குக் காரணம் நானே என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
Source:.inneram
January 09, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- K-Tic ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் & கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' / K-Tic Conducted 'Educational Awareness Camp & Exchanges of Thoughts
No comments:
Post a Comment