Islamic Widget

December 08, 2010

FIR பதிவு செய்த 24 மணி நேரத்தில் இணையத்தில் வெளியிட கோர்ட் உத்தரவு!

புதுடெல்லி: காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்.ஐ.ஆர்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.


எஃப்.ஐ.ஆர் என்பது அரசு அலுவலகத்தில் அரசு அதிகாரி ஒருவரால் பதிவு செய்யப்படும் பத்திரமாகும். இதை சட்டப்படி பொது பத்திரமாகத்தான் கருத வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அரசின் கருத்தை தெரிவிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எஃப்.ஐ.ஆர் என்பதை ஒரு பொது பத்திரமாகத்தான் கருத வேண்டும். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் அதை காவல்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும். இந்த உத்தரவை 2011 பிப்ரவரி 1 முதல் அனைத்து காவல் நிலையங்களும் கடைபிடிக்க வேண்டும் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி மன்மோகன் அடங்கிய முதல் அமர்வு தீர்ப்பளித்தது.

 
Source:.inneram

No comments:

Post a Comment