Islamic Widget

December 08, 2010

அல்ஜஸீரா தொலைக்காட்சியை இனி இந்தியாவில் காணலாம்!

கத்தர் தலைநகர் தோஹாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல ஆங்கிலத் தொலைக்காட்சியான அல்ஜஸீரா தொலைக்காட்சியை இந்தியாவில் ஒளிபரப்ப இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அல்ஜஸீரா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனுமதி கோரி நாங்கள் காத்திருந்தோம். அதற்கான அனுமதி எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அல்ஜஸீரா தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் அல் அன்ஸ்டீ கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் விருகள் பெற்ற எங்களின் பல நிகழ்ச்சிகளுக்கு இந்தியாவில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். இந்தியாவின் சிறப்புச் செய்திகளை எங்கள் செய்தி நிறுவனம் மூலம் ஏற்கனவே உலகம் முழுவதும் உள்ள எங்கள் நேயர்களுக்காக வழங்கி வந்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள சுமார் 115 மில்லியன் வீடுகளுக்கு எங்கள் ஒளிபரப்பு சென்றடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். உலகளாவிய அளவில் எங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி வரும் வேளையில் இந்தியாவின் சந்தை மிக முக்கியமானது என்று இந்தியப் பகுதிகளுக்கான தவைர் டியானா ஹோஸ்கர் கூறியுள்ளார்.

Source:.inneram

No comments:

Post a Comment