பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என துணை முதல்வருக்கு ஊராட்சி தலைவர் வனஜா கோபாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனு: பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பூவாலை ஊராட்சி பகுதி முழுவதும் மழை, வெள்ளத்தின் போது கடுமையாக பாதிக்கப்பட்டது. பரவானாறில் இருந்து வெள்ளம் கிராமத்திற்குள் புகுந்ததில் குடிசை வீடுகள் மற்றும் 500 ஏக்கர் விவசாய நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த குடிசை வீடுகள் மற்றும் நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Source:dinamalar photos: mypno
No comments:
Post a Comment