Islamic Widget

December 03, 2010

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கடலூர் : மழை நீடித்து வருவதால் கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.


இதுகுறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.
 
 இதனால் மாவட்டத்தில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும், மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (3ம் தேதி) ஒருநாள் விடுமுறை விடப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
 
Source:dinamalar

No comments:

Post a Comment