Islamic Widget

December 03, 2010

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதிகளில் சேர்மன்கள் பார்வை

சிதம்பரம் : சிதம்பரம் மற்றும் பரங்கிப்பேட்டை பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒன்றிய சேர்மன்கள் பார்வையிட்டு உணவு வழங்க ஏற்பாடு செய்தனர்.கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் சிதம்பரம் பகுதியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

பாதிக்கப்பட்ட தில்லைக்காளி கோவில் பகுதி, வாகீசன் நகர், கோவிந்தசாமி நகர், அண்ணா தெரு, பொன்னம்பலம் நகர் பகுதிகளை பார்வையிட்ட கீரப்பாளையம் சேர்மன் செந்தில்குமார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு ஏற்பாடு செய்தார். பரங்கிப்பேட்டை: பு.முட்லூர், தச்சுக்காடு, சேந்திரக்கிள்ளை, பெரியகுமட்டி, சின்னகுமட்டி உட்பட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். அப்பகுதிகளை சேர்மன் முத்துபெருமாள் பார்வையிட்டார்.


ஒன்றிய ஆணையர் சந்தர், சிறப்பு தாசில்தார் கோவிந்த், வி.ஏ.ஓ., கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர். குறிஞ்சிப்பாடி: வட்டாரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கல்குணம், பூதம்பாடி, ஓணாக்குப்பம், மருவாய், அயன் குறிஞ்சிப்பாடி, திருவெண்ணைநல்லூர் கிராமம் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குறிஞ்சிப்பாடி ஒன்றிய தி.மு.க., சார்பில் கடந்த நான்கு நாட்களாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் 42 ஆயிரத்து 52 உணவு பொட்டலங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

Source:dinamalar

No comments:

Post a Comment