பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் முஸ்லிம் மக்கள் கழக செயற்குழுக் கூட்டம் நடந்தது. மாநில மகளிரணி அமைப்பாளர் ராபியத்துல் பஷரியா தலைமை தாங்கினார். நகர மகளிரணி செயலாளர் ராஜம், பாத்திமாபீ முன்னிலை வகித்தார். சர்புதீன் வரவேற்றார்.
நிறுவன தலைவர் ஜைனுதீன் பேசினார். கூட்டத்தில் கடலூரில் வரும் ஜனவரி மாதம் 17ம் தேதி முஸ்லிம் மக்கள் கழக ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகர தலைவர் அப்துல் அமீது, ஆதிலட்சுமி, அன்னம் உட்பட பலர் பங்கேற்றனர்.
Source:dinamalar
No comments:
Post a Comment