பரங்கிப்பேட்டை : வேன் டிரைவரை தாக்கிய மூன்று பேரை போலீசார் தேடிவருகின்றனர். பரங்கிப்பேட்டை ஸ்டாலின் நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (21). டாடா ஏஸ் டிரைவர். இவர் கடந்த 17ம் தேதி பு.முட்லூரில் இருந்து கடலூருக்குச் வேனை ஓட்டிச் சென்றார்.
புதுச்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது வில்லியநல்லூர் காலனியை சேர்ந்த சிவராஜ் மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு வேனை நிறுத்தி செல்வராஜியிடம் தகராறு செய்து தாக்கினர். படுகாயமடைந்த செல்வராஜ் சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து சிவராஜ் உட்பட மூன்று பேரை தேடிவருகின்றனர்.
Source:dinamalar
No comments:
Post a Comment