கடலூர் முதுநகரில் இருந்து வேன் ஒன்று கடலூரில் உள்ள தனியார் பள்ளி மாணவ- மாணவிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை 7.30 மணி அளவில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.
இந்த வேனில் பெரியகுப்பம், மஞ்சலிங்க பேட்டை, திருச்சோபுரம், ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் வந்தனர். வேனை முதுநகரை சேர்ந்த டிரைவர் மணிவாசகம் ஓட்டினார்.
செம்மங்குப்பம் பஸ் நிறுத்தத்தில் வந்ததும் டிரைவர் மணிவாசகம் வேனை நிறுத்தி அங்கு நின்ற மாணவியை வேனில் ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது கடலூரில் இருந்து தனியார் கம்பெனிக்கு சொந்தமான வேன் ஒன்று வேகமாக வந்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வேன் பள்ளி வேனின் பக்கவாட்டில் உரசி கவிழ்ந்தது. அந்த வேனும் மோதிய வேகத்தில் பள்ளி வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் பள்ளி வேனில் இருந்த மாணவிகள் அபிராமி, அகிலாண்டஈஸ்வரி, பவித்ரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்த மற்ற மாணவ-மாணவிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மாணவ- மாணவிகளுக்கு டாக்டர் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.இந்த தகவல் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. அவர்கள் அலறி அடித்துக்கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். இதனை கேள்விபட்டதும் உறவினர்களும் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து கதறி துடித்தனர். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Source: maalaimalar
No comments:
Post a Comment