Islamic Widget

December 20, 2010

பரங்கிப்பேட்டை சாலையை காக்க தடுப்பு சுவர் கலெக்டருக்கு கோரிக்கை

கடலூர் : புதுச்சத்திரம் - பரங்கிப்பேட்டை சாலையை பாதுகாக்க தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிதம்பரம் அடுத்த வில்லியநல்லூர் கிராமத்தில் இயங்கி வரும் மனித உரிமைகள் கழக அமைப்பாளர் ராஜேந்திரன்,
கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: புதுச்சந்திரம் - பரங்கிப்பேட்டை சாலையை ஒட்டியே பக்கிங்காம் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயை தூர் வாரியபோது சாலையின் பாதுகாப்பை கருதாமல் பல இடங்களில் சாலை ஓரத்திலேயே வெட்டப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக இந்த சாலையில் பல இடங்களில் உடைத்துக் கொண்டு கால்வாய்க்கு சென்றன. இதனால் சாலை பல இடங்களில் பழுதடைந்துள்ளது. இந்த சாலையை பாதுகாத்திட கால்வாயை ஒட்டி தடுப்புச் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Source:dinamalar

No comments:

Post a Comment