சிதம்பரம் : சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளி மாணவி மாநில அளவிலான தனித்திறன் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளி மாணவி ரூத் பிரின்ஸ் ஜாய்.
இவர் சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த தனித்திறன் போட்டியில் பங்கேற்று குண்டு எறிதலில் முதலிடம் பெற்று மாநில அளவிலான தனித்திறன் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெற்றி பெற்ற மாணவியை உடற்கல்வி ஆசிரியர் சீனுவாசன், வெங்கடேஷ், செயலாளர் பாலசுப்ரமணியன், தலைமை ஆசிரியர் ரவிசங்கர், உதவி தலைமை ஆசிரியர் சாமிநாதன் பாராட்டினர்.
Source:dinamalar
No comments:
Post a Comment