கடலூர் : கடலூர் மாவட்டத்தில் நேற்று குளிர்ந்த காற்றுடன் மழை தூறல் இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 26ம் தேதி முதல் கடந்த 6ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கன மழை பெய்தது.
10 நாள் தொடர்ந்து பெய்த மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. 6ம் தேதிக்கு பிறகு மழை விட்டு வெயில் காயத் துவங்கியதால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீர் மெல்ல, மெல்ல வடிந்து சகஜ நிலைக்கு திரும்பியது. இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பகல் 12 மணி முதல் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை தூறல் இருந்து கொண்டே இருந்தது. கடலூரில் பகல் 2 மணி அளவிலும், மாலை 5 மணி அளவிலும் சற்று நேரம் கன மழை பெய்தது. பகல் 12 மணி முதல் தொடர்ந்து மழை தூறல் இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Source:dinamalar
No comments:
Post a Comment