அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் 32ஆவது முறையாக தள்ளி வைக்கப்பட்டது.
அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கடந்த 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, புவனகிரி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட்டார். ஒரே நேரத்தில் இவ்வாறு போட்டியிட்டதால் இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்றும் அவர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு தொடரலாம் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதனடிப்படையில் புவனகிரி தொகுதி தேர்தல் அதிகாரி செல்வமணி பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் 2007ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் ஜெயலலிதா மேல்முறையீட்டின்படி உச்சநீதிமன்றம் இவ் வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை பிறப்பித்தது.
இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதால் அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் வழக்கு விசாரணைக்கு வரும்போது தள்ளி வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இவ்வழக்கு பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்துபோது நீதிபதி இளங்கோவன் வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதிக்குத் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
Source:.inneram
December 03, 2010
பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான வழக்கு 32ஆவது முறையாக ஒத்திவைப்பு!
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு : திமுகவினர் ஆவேசம் !
- சென்னையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு
- போலீஸ் பணிக்கு எழுத்துத் தேர்வுகடலூரில் நாளை நடக்கிறது
- இறப்புச் செய்தி
- ரியாத் விமான நிலையத்தில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து
- விஜயகாந்த் குடிகாரர் அல்ல! - வடிவேலுவுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அறிவுரை
- பரங்கிப்பேட்டை ஜசிஜசிஜ வங்கியில் பரபரப்பு !
- பரங்கிப்பேட்டையில் வாலிபால் போட்டி!
- நன்பன் நூா் அலி தி௫மணம்
- பரங்கிப்பேட்டையில் ஈகைத்திருநாள் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி

No comments:
Post a Comment