Islamic Widget

November 27, 2010

BMW கார்கள் உட்பட சென்னையில் சுமார் 13 இலட்சம் கார்கள் உற்பத்தி

சென்னை: வரும் நிதி ஆண்டிற்குள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் உள்ள கார் தொழிற்சாலைகளிலிருந்து வருடத்திற்கு சுமார் 13 இலட்சம் கார்கள் தயாராக இருக்கின்றன.


இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அரசின் தொழில் துறை செயலர், ராஜிவ் ரஞ்சன், வரும் ஆண்டுகளில் இந்தியாவில் ஓடும் மூன்றில் ஒரு கார், சென்னையில் தயாரானதாக இருக்கும் என கூறினார். மேலும், உலக புகழ் பெற்ற பி எம் டபில்யூ, ஃபோர்ட், ஹூண்டாய், ரினால்ட் (BMW, Ford, Hyundai, Renault ) ஆகிய நிறுவனங்கள் சென்னையில் வரும் நிதி ஆண்டில் தங்களின் தயாரிப்புகளை தொடங்க திட்டமிட்டுள்ளன. அவ்வாறு அமையும்பட்சத்தில், சென்னை, உலகின் முன்னனி ஆட்டோமொபைல் நகரமாக உருவாகும். இதன் மூலம் ஆயிரகனக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என நம்பப்படுகிறது.

ஹரியனாவில் உள்ள குரகான் நகரில் மாருதி வகை கார்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு வருடத்திற்கு சுமார் 12 இலட்சம் கார்களும், சுமார் 36 இலட்சம் பைக்குகளும் ஆண்டொன்றுக்கு தயாராகின்றன. சென்னையுடன் ஒப்பீடும் போது மாருதி நிறுவனத்தில் தயாராகும் கார்கள் குறைவு தான். மேலும் சென்னையில் அமைந்து இருக்கும் அனைத்து நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Source:inneram

No comments:

Post a Comment