Islamic Widget

November 27, 2010

சென்னை விமான நிலையத்தில் இலங்கைத்தமிழர் கைது!

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் இலங்கைதமிழர் ஒருவர் தனது விசா காலம் முடிந்த பின்னும் சட்ட விரோதமாக தங்கியிருந்து மீண்டும் இலங்கை செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டார்.


கடந்த ஜனவரி மாதம் சுற்றுலா விசாவில் சென்னைக்கு வந்தார் இலங்கையைச் சேர்ந்தஜோசப் கிருஷ்டி (வயது 55). அதன் பின்னர் அவர் இலங்கைக்கு திரும்பி செல்லவில்லை. விசா காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிந்து விட்ட நிலையில் வளசரவாக்கத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்துள்ளார். அங்கிருந்தபடியே சென்னையில் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்தார்.

இந்நிலையில் ஜோசப் கிருஷ்டி, மீண்டும் இலங்கைக்குச் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். விமான நிலைய இமிகிரேசன் அதிகாரிகள் அவரது விசாவை பரிசோதித்தபோது அவரது சுற்றுலா விசாவுக்கான காலம் முடிந்து இருந்தது தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து ஜோசப்கிருஷ்டி மீனம்பாக்கம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவரை மீனம்பாக்கம் காவல்துறையினர் வளசரவாக்கம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். வளசரவாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜோசப் கிருஷ்டியை கைது செய்தனர்.

Source:inneram

No comments:

Post a Comment