Islamic Widget

November 27, 2010

தொடரும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக செ‌ன்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் இலட்சத்தீ‌வி‌‌ல் அநேக இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய கனமழை பெ‌ய்யக்கூடு‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌‌ய்வு மையம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கடலோர கர்நாடகா, தெற்கு கடலோர ஆந்திரா‌வி‌ல் ஒரு சில இடங்களிலு‌ம் ராயலசீமா‌வி‌ல் ஓ‌ரிரு இட‌ங்க‌ளிலு‌ம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெ‌ய்யக்கூடு‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌‌ய்வு மைய‌ம் கூ‌றியு‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌ல் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எ‌ன்று‌ம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் எ‌ன்று‌ம் சில சமயங்ளில் கனமழை பெய்யக்கூடும் எ‌ன்று‌ம் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் கூ‌றியு‌ள்ளது.

Source:inneram

No comments:

Post a Comment