பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் தங்கி சிகிச்சையளிக்க டாக்டரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் அகரம், புதுப்பேட்டை, சின்னூர், சாமியார் பேட்டை, புதுக்குப்பம், பு.முட்லூர், அரியகோஷ்டி, கிள்ளை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் உள் நோயாளி, வெளி நோயாளி, பிரசவ வார்டுகள், ஸ்கேன், எக்ஸ்ரே என அனைத்து வசதிகளும் உள்ளன.மருத்துவமனையில் நான்கு டாக்டர்களில் ஒரு டாக்டர் மாறுதலில் சென்றதால் தற்போது மருத்துவமனை மருத்துவ அலுவலரை சேர்த்து மூன்று டாக் டர்களே உள்ளனர். இதனால் கடந்த இரண்டு மாதமாக இரவு நேரத்தில் டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை.இரவில் தங்கி சிகிச்சையளிக்க டாக்டரை நியமிக்க கலெக்டர் நடவடிக்க எடுக்க வேண்டும்.
Source: Dinamalar photos pno.news
November 09, 2010
அரசு மருத்துவமனையில் இரவு பணியில்டாக்டர்கள் நியமிக்க மக்கள் வலியுறுத்தல்
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- என்ன செய்தார் எம்.எல்.ஏ. செல்வி ராமஜெயம் ?
- மகனை வைத்து பின்லேடனைப் பிடிக்க புஷ் போட்ட திட்டம்!
- சவூதி: "சினிமா தேவை" என்கிறார் உயர் அதிகாரி
- இடைமறித்து எதிரி ஏவுகணைகளை தாக்கும் இந்தி ஏவுகணைச் சோதனை வெற்றி
- முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் படத்தை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்த மாணவன் கைது
- விஷ வண்டுகளை அழிக்க பரங்கிப்பேட்டை தீயணைப்பு படையினர் தயக்கம்
- மோடியின் உண்ணாவிரதத்தில் போலீசார் தடியடி!
- உதவி தொகை வழங்கும் விழா
- விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் ரூ. 21 கோடி செலவில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மும்முரம்
- எல்லா ஹிந்துக்களும் தீவிரவாதிகள் அல்ல – திக்விஜய் சிங்

No comments:
Post a Comment