Islamic Widget

November 25, 2010

வடிகால் வாய்க்கால் தற்காலிக சாலை அகற்றம்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே வடிகால் வாய்க்காலில் போடப்பட்ட தற்காலிக சாலை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. பரங்கிப்பேட்டையில் இருந்து சிதம்பரம் செல்லும் நெடுஞ்சாலையில் அகரம் ரயிலடி அருகே உள்ள பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டப்பட்டது. அதற்காக போக்குவரத்து பாதிக்காமல் இருக்க அரியகோஷ்டி வடிகால் வாய்காலில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டது.

அச்சாலை வழியாக பரங்கிப்பேட்டையில் இருந்து சிதம்பரம் செல்லும் அனைத்து வாகனங்களும் சென்று வந்தன. கடந்த ஆண்டு புதிய பாலம் வழியாக போக்குவரத்து இயக்கப்பட்டது. ஆனால் அரியகோஷ்டி வடிகால் வாய்க்காலில் போடப்பட்ட தற்காலிக சாலை அகற்றப்படாமல் இருந்தது. இதனால் மழை, வெள்ள காலங்களின்போது அரியகோஷ்டி, சின்னகுமட்டி, பெரியகுமட்டி, மஞ்சக்குழி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் நெற்பயிர்களில் தேங்கிய தண்ணீர் வடிய வழியில்லாததால் பாதிக்கப்பட்டனர்.


கடந்த ஆண்டு வெள்ளத்தின்போது தற்காலிக சாலையை அகற்றகோரி விவசாயிகள் கோரிக்கையை அதிகாரிகள் அலட்சியப்படுத்தியதால் விவசாயிகள் சாலை மறியல் செய்தனர். இந்நிலையில் நேற்று பரங்கிப்பேட்டை நெடுஞ்சாலைத்துறையினர் வடிகால் வாய்க்காலில் இருந்த தற்காலிக சாலையை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்.


Source:dinamalar

No comments:

Post a Comment