Islamic Widget

November 25, 2010

சாலையோர கோவில்கள் அகற்றும் பணி துவக்கம்

கடலூர் : சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி  பொது மக்களுக்கு இடையூறாக உள்ள சாலையோர கோவில்கள் அகற்றும் பணி தொடங்கின. குஜராத் மாநிலத்தில் இருந்து ஆக்கிரமிப்பு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் உள்ள கோவில்களை அகற்ற தீர்ப்பு கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் இந்த தீர்ப்பினை பின்பற்றி பொது மக்களுக்கு இடையூறாக அரசு இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மத சம்மந்தமான கோவில்களை அகற்ற சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் சாலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில்களை கணக்கெடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 3,142  கோவில்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்திலேயே திட்டக்குடி தாலுகாவில் மட்டும் 1,290 கோவில்கள் சாலையோர புறம்போக்கில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


நெடுஞ்சாலைத்துறை சார்பில் முதலில் விருத்தாசலம், கிள்ளை பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டுள்ள கோவில்கள் முதற்கட்ட மாக அகற்றப்பட்டன. விரைவில் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதியில் உள்ள கோவில்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Source:dinamalar photos: pno.news

No comments:

Post a Comment