சிதம்பரம் : சிதம்பரம் இருவழிச் சாலையாக உள்ள சிதம்பரம் மேலவீதியை பல்வழிச் சாலையாக மாற்ற 65 லட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தும் பணி துவங்கியது.
சுற்றுலா தலமான சிதம்பரத்தில் புகழ் பெற்ற நடராஜர் கோவில் இருப்பதாலும், பிச்சாவரம் வனச்சுற்றுலா மையம் இருப்பதாலும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதற்கேற்ப சிதம்பரம் நகரை சிங்கார சிதம்பரமாக மாற்ற பல்வேறு திட்டங்கள் போடப்பட்டது. ஆனால் முழுமையாக எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. பல தடைகளைத் தாண்டி நகரில் நடைபாதை, பூங்காக்கள் அமைக்கப்பட்டு அவைகள் பராமரிக்கப்படாமல் போனது.
இருந்தும் தற்போதைய கலெக்டர் சீத்தாராமன் சிதம்பரம் நகரை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.
அந்த முயற்சியின் ஒரு கட்டமாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் இருவழிச்சாலையாக உள்ள சிதம்பரம் மேலவீதி, போல்நராயணன் பிள்ளை தெரு, சிதம்பரம் - கவரப்பட்டு, சிதம்பரம் - டி.எஸ்.பேட்டை ஆகிய சாலைகள் பல்வழிச் சாலைகøளாக மாற்றப்படுகிறது. முதற்கட்ட பணியாக சிதம்பரம் மேலவீதி ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 65 லட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தும் பணி நேற்று துவங்கியது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று சிதம்பரம் மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே நடந்தது. ஆர்.டி.ஓ., ராமராஜ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் சீனுவாசன், தாசில்தார் காமராஜ் முன்னிலை வகித்தனர். விழாவில் உதவி பொறியாளர் தவராஜ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கண்ணபிரான், சப் இன்ஸ்பெக்டர் ஜோதி உட்பட பலர் பங்கேற்றனர்.
Source:dinamalar
November 25, 2010
சிதம்பரத்தில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணி துவங்கியது
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- நஷ்டவாளர்கள் யார்?
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- புதிதாக கட்டப்படும் வாத்தியாப்பள்ளி
- பரங்கிப்பேட்டையில் வாலிபால் போட்டி!
No comments:
Post a Comment