Islamic Widget

November 27, 2010

பரங்கிப்பேட்டை அ௫கே வீடு புகுந்து திருட்டு

பரங்கிப்பேட்டை:வீடு புகுந்து பணம் மற்றும் மொபைல் போன்களை திருடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் கொடிக்கால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் குத்தூஸ் (59). நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால் தனது கூரை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பக்கத்து வீட்டில் தூங்கினார்.


இரவு 2 மணியளவில் இயற்கை உபாதைக்காக வெளியே வந்த போது அவரது கூரை வீட்டில் இருந்து நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வெளியே வந்தனர். உடன் சத்தம் போட்ட குத்தூஸ் அக் கும்பல் தாக்கிவிட்டு ஓடினர்.வீட்டிற்கு சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5,000 ரூபாய், இரண்டு மொபைல் போன்கள் திருடு போனது தெரியவந்தது.இதுகுறித்து அப்துல் குத்தூஸ் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் வழக்குப்பதிந்து மர்ம கும்பலை தேடிவருகிறார்.

Source:dinamalar

No comments:

Post a Comment