கடலூர்:பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நிலமைகளை கண்காணித்திட தாலுகா அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
நீர் நிலைகள் நிரம்பியுள்ள நிலையில் நிலமைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ஒவ்வொரு தாலுகாவிற்கும் துணை கலெக்டர் அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கடலூர் நடராஜன் (94434 83094), குறிஞ்சிப்பாடி ராஜேந்திரன் (98423 73444), பண்ருட்டி திருவேங்கடம் (98948 21351), சிதம்பரம் கந்தசாமி (94450 00209), காட்டுமன்னார்கோவில் கேசவமூர்த்தி (98424 05631), விருத்தாசலம் பத்மினி (98942 14133), திட்டக்குடி கணபதி (98427 23080) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தாலுகாக்களில் முகாமிட்டு நிலமைகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் மழை மற்றும் வெள்ள பாதிப்பு இருந்தால் உடனடியாக கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி@நரமும் இயங்கும் வெள்ளக் கட்டுப்பாட்டு அறைக்கு 04142-220651 என்ற தொலைபேசி அல்லது கட்டணமில்லா தொலைபேசியான 1072க்கோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Source:dinamalar
November 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- புதிய டாஸ்மாக் கிளையை திறப்பதற்கு முன்பே உடனே இழுத்துமூட கோரிக்கை
- "புகைக்கும்' சென்னை பெண்கள்: எண்ணிக்கையில் அமோக வளர்ச்சி!
- ஹாஜியார் நகா்
No comments:
Post a Comment