Islamic Widget

November 24, 2010

செல்போன் மூலம் மணி டிரான்ஸ்ஃபர்!

வங்கிக் கணக்கு பண பரிமாற்றங்களை செல்போன் மூலம் செய்யும் வசதியை என்பிசிஐ என்றழைக்கப்படும் நேஷ்னல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் உருவாக்கியுள்ளது. நாட்டிலேயே முதலாவதாக இத்தகைய வசதி மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை மற்றவருக்கு ஏழு விநாடிகளில் மாற்றம் செய்ய முடியும் என்று என்பிசிஐ தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான ஏ.பி. ஹோடா தெரிவித்தார். செல்போன் மூலமான பணபரிமாற்ற வசதியை வங்கியும், இதற்கான தொழில்நுட்ப சேவை அளிக்கும் நிறுவனங்களும் இணைந்து அளிக்கும்.

இத்தகைய மொபைல் பரிமாற்ற சேவையைப் பெற விரும்புமவாடிக்கையாளர்கள், தங்களது செல்போன் எண்ணை வங்கியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போது வாடிக்கையாளருக்கு மூன்று இலக்க (பாஸ்வேர்டு) கடவுச்சொல் அளிக்கப்படும். ஒவ்வொரு வங்கிக்கும் தேசிய வங்கி அடையாள எண் (என்பிஐஎன்) அளிக்கப்படும். இதன்படி பணம் அனுப்புவோர், அதைப் பெறுவோர் ஆகியோருக்கு என்பிஐஎன் தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் செல்போன் பண பரிவர்த்தனை எண் (எம்எம்ஐடி) அளிக்கப்பட வேண்டும்.
என்எம்ஐடி , என்பிஐஎன் ஆகியவற்றை சரியாகக் குறிப்பிட்டு பண பரிவர்த்தனை செய்தால் ஏழு விநாடிகளில் பண பரிமாற்றம் நடைபெறும். ஏற்கெனவே பண பரிவர்த்தனைக்குப் பதிலாக சேமிப்புக் கணக்கு அட்டை (டெபிட் கார்ட்) ஆகியவற்றைப் பயன்படுத்த ரிசர்வ் வங்கி ஊக்குவிக்கிறது. இப்போது செல்போன் பணப் பரிவர்த்தனை செய்யவும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, யூனியன் வங்கி, யெஸ் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, ஆக்ஸிஸ் வங்கி போன்ற ஏழு வங்கிகள் இத்தகைய சேவையை அளிக்க மத்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றுள்ளன. மேலும் பல வங்கிகள் இத்தகைய சேவைக்காக ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றுள்ளன.


Source:inneram

No comments:

Post a Comment