Islamic Widget

November 24, 2010

1.78 கோடி போலி ரேஷன் கார்டுகள் நீக்கம்

கடந்த செப்டம்பர் மாதம் வரை இந்தியா முழுவதும் புழக்கத்தில் இருந்து 1.78 கோடி போலி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக மத்திய வேளாண்துறை இணைச்சர் பேராசிரியர் கே.வி. தாமஸ் கூறியுள்ளதாவது:


பொது விநியோகத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை அகற்றி அதை செம்மைப்படுத்துவதற்கு 2006-ம் ஆண்டு 9 அம்ச செயல் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் முடிய 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் 1.78 கோடி தகுதியற்ற மற்றும் போலி ரேஷன் கார்டுகளை நீக்கியுள்ளன.

திட்டக் குழுவின் துணைத் தலைவர் தலைமையிலான உணவு மற்றும் பொது விநியோகம் குறித்த பணிக்குழுவானது சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை சிறந்த முறையில் வழங்குவதற்கான பரிந்துரைகளை வழங்கவுள்ளது. இந்தக் குழுவானது வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பயனாளிகளின் எண்ணிக்கையை இறுதி செய்தல், சேமிப்பு வசதிகளை அதிகப்படுத்துதல், பொது விநியோகத் திட்டத்தை கணினிமயமாக்குதல் உள்ளிட்ட அம்சங்களை ஆராயவுள்ளது.

No comments:

Post a Comment