Islamic Widget

November 24, 2010

அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்

கடலூர் : கடலூரில் இருந்து புதுச்சேரி வந்த அரசு பஸ்களில் நேற்று கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. கடலூர் நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணி நான்கு ஆண்டுகளாக ஜவ்வாக இழுத்து வருவதை கண்டித்து தனியார் பஸ் உரிமையாளர்கள், பொது நல அமைப்புகள்நேற்று வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தன.

கடலூரில் நேற்று பெரும்பாலான தனியார் பஸ்கள் இயங்காததால் அரசு போக்குவரத்து கழகம் புதுச்சேரி, சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய நகர்களுக்கு கடலூரில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கியது. கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு  நேற்று இயக்கப்பட்ட அரசு சிறப்பு பஸ்களில் வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணமான 7 ரூபாய்க்கு பதில், ஒரு ரூபாய் கூடுதலாக சேர்த்து 8 ரூபாய் வசூல் செய்தனர். இதனால் பயணிகள் அதிருப்தியடைந்தனர்.

Source:dinamalar photos: pno.news

No comments:

Post a Comment