Islamic Widget

November 18, 2010

கனமழையால் பூக்கள் விலை பல மடங்கு உயர்வு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் கோவை பூக்கள் அங்காடிக்கு விற்பனைக்கு வரும் பூக்களின் வரத்து பாதிக்கும் கீழாக குறைந்துள்ளது இதன் காரணமாக பூக்களின் விலை தாறுமாறாக கூடியுள்ளது.


கோவைக்கு பூஅங்காடிக்கு சத்தியமங்கலம், மதுரை, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் மல்லிகை, ரோஜா பூக்கள் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் இங்கு விற்பனைக்கு வரும் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. பொதுவாக தினமும் 5 டன் மல்லிகை, 75,000 ரோஜாப்பூக்கள் வரும். தற்போது ஒரு டன் மல்லிகை, 30,000 ரோஜாப் பூக்கள் மட்டுமே வருகிறது.

இதுகுறித்து அங்கிருந்த பூ வியாபாரி ஒருவர் கூறுகையில் 'வழக்கமான நாட்களில் கிலோ ரூ.80 முதல் 100 வரைக்கும் மல்லிகை விலை போகும் ஆனால் தற்போது மல்லிகைப்பூ கிலோ ரூ.850க்கும் ரோஜாப்பூ கொத்து (20 பூக்கள் அடங்கியது ) ரூ.40 முதல் ரூ.80 வரையிலும் விற்கப்பட்டவை தற்போது ரூ.150 முதல் 200 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது’ என்றார்

Source:inneram

No comments:

Post a Comment