ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரங்களான மக்கா, மதீனா ஆகியவற்றுக்கு பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் உலகம் முழுவதும் இருந்து ஹஜ் புனிதப்பயணமாக ஆண்டுதோறும் செல்வது உண்டு.
இந்த புனிதப்பயணம் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. அடுத்த வாரம் இந்த பயணத்துக்காக உலக நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு வரும்போது அல்கொய்தா தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அந்த நாட்டுக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதைத்தொடர்ந்து அந்த நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக இளவரசர் நயீஃப் கூறுகையில், எந்த தீவிரவாத தாக்குதலையும் முறியடிக்கும் வல்லமை சவுதி அரேபியாவுக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், ஹஜ் புனிதப்பயணம் வருபவர்களின் பாதுகாப்புக்கு எந்த குந்தகமும் ஏற்படாமல் பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். மோசமான விளைவு எதுவும் நடக்க இறைவன் விடமாட்டார் என்று குறிப்பிட்டார்.
Source: inneram
November 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- தமிழக சட்ட மேலவை தேர்தல்: ஆலிம்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத் தலைவரின் மகள் வஃபாத் / Condolence Message from K-Tic
- குவைத்தில் புனித அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சி

இறையருளைக்கொண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்றிருக்கும் உலக மக்கள்அனைவர்கும் சவுதிஅரேபியா அரசாங்கம் தகுந்த பாதுக்காப்பு கொடுக்கும்.
ReplyDelete