பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் பழைய ரயில்வே பாலம் கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் அகல ரயில் பாதைக்காக பரங்கிப்பேட்டை வெள்ளாற்றில் புதிய பாலம் கட்டப்பட்டது. புதிய பாலத்தின் பக்கத்தில் உள்ள பழைய ரயில்வே கருடரை அப்புறப்படுத்த கடந்த பிப்ரவரி மாதம் டெண்டர் விடப்பட்டு அதற்கான பணிகள்...
துவங்கியது. 600 அடி நீளம் உள்ள கருடரை ஒரு மாதத்திற்கும் மேல் அப்புறப்படுத்தும் பணி நடந்தும் 100 அடி அளவிற்கு மட்டுமே வெட்டி எடுக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் கருடரை அப்புறப்படுத்தாததால் ரயில்வே துறை சார்பில் சம்பந்தப்பட்ட காண்ட்ராக்டருக்கு அபராதம் விதித்தது. இதனால் கடந்த 5 மாதமாக கருடரை அப்புறப்படுத்தும் பணி நடக்காமல் உள்ளது. தற்போது 20 அடி நீளத்திற்கு கருடர் புதிய பாலத்தின் மீது சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, பழைய ரயில்வே கருடரை அப்புறப்படுத்த ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Source: Dinamalar
No comments:
Post a Comment