Islamic Widget

November 13, 2010

ஹஜ்ஜின் போது சவூதியை தாக்க அல்கொய்தா திட்டம்!

ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரங்களான மக்கா, மதீனா ஆகியவற்றுக்கு பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் உலகம் முழுவதும் இருந்து ஹஜ் புனிதப்பயணமாக ஆண்டுதோறும் செல்வது உண்டு.


இந்த புனிதப்பயணம் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. அடுத்த வாரம் இந்த பயணத்துக்காக உலக நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு வரும்போது அல்கொய்தா தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அந்த நாட்டுக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதைத்தொடர்ந்து அந்த நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக இளவரசர் நயீஃப் கூறுகையில், எந்த தீவிரவாத தாக்குதலையும் முறியடிக்கும் வல்லமை சவுதி அரேபியாவுக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், ஹஜ் புனிதப்பயணம் வருபவர்களின் பாதுகாப்புக்கு எந்த குந்தகமும் ஏற்படாமல் பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். மோசமான விளைவு எதுவும் நடக்க இறைவன் விடமாட்டார் என்று குறிப்பிட்டார்.


Source: inneram

1 comment:

  1. இறையருளைக்கொண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்றிருக்கும் உலக மக்கள்அனைவர்கும் சவுதிஅரேபியா அரசாங்கம் தகுந்த பாதுக்காப்பு கொடுக்கும்.

    ReplyDelete