கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சிகளில் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.10.32 கோடியில் சாலை பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் பேசினார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சிகளில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் 10 தார் சாலைகளும், 181 சிமெண்ட் சாலைகள் அமைப்பதற்கு 10.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அண்ணாமலை நகர் பேரூராட்சியில் தார் மற்றும் சிமெண்ட் சாலை பணிக்கு 50.60 லட்சம் ரூபாயும், காட்டுமன்னார்கோவிலில் சிமெண்ட் சாலை பணிக்கு 83.95 லட்சமும், பரங்கிப்பேட்டையில் சிமெண்ட் சாலை பணிக்கு 84.60 லட்சமும், வடலூரில் தார், சிமெண்ட் சாலை பணிகளுக்கு 77.05 லட்சமும், திட்டக்குடியில் சிமெண்ட் சாலை பணிக்கு 80.57 லட்சமும், குறிஞ்சிப்பாடியில் தார் மற்றும் சிமெண்ட் சாலை பணிக்கு79.25 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புவனகிரியில் தார், சிமெண்ட் சாலை பணிகளுக்கு 82.65 லட்சமும், கெங்கைகொண்டானில் சிமெண்ட் சாலை பணிக்கு 28.60 லட்சமும், பெண்ணாடத்தில் 83.10 லட்சத்தில் சிமெண்ட் சாலைகளுக்கும், ஸ்ரீமுஷ்ணத்தில் தார், சிமெண்ட் சாலை பணிகளுக்கு 63.50 லட்சமும், லால்பேட்டையில் சிமெண்ட் சாலை பணிகளுக்கு 62.30 லட்சமும், மங்கலம்பேட்டையில் சிமெண்ட் சாலை பணிகளுக்கு 46 லட்சமும், தொரப்பாடியில் சிமெண்ட் சாலை பணிகளுக்கு 45.28 லட்சமும், மேல்பட்டாம்பாக்கத்தில் தார், சிமெண்ட் சாலை பணிகளுக்கு 61.80 லட்சமும், கிள்ளையில் தார், சிமெண்ட் சாலை பணிகளுக்கு 59.55 லட்சமும், சேத்தியாதோப்பில் சிமெண்ட் சாலை பணிக்கு 43.75 லட்சம் என மொத்தம் 191 சாலை பணிகளுக்கு 10.32 கோடி ரூபாய் விரைவில் பணி ஆணை வழங்கப்படவுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் வரும் 31.3.2011ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என என கலெக்டர் பேசினார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Source: Dinamalar - Photo: CWO
November 29, 2010
பரங்கிப்பேட்டையில் சிமெண்ட் சாலை பணிக்கு 84.60 லட்சம் ஒதுக்கீடு - ஆட்சியர் அறிக்கை
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- நஷ்டவாளர்கள் யார்?
- புதிதாக கட்டப்படும் வாத்தியாப்பள்ளி
- பரங்கிப்பேட்டையில் புதிதாய் திறக்கப்பட்டுள்ள தம்மாம் ஷாபிங் செண்டர்!
No comments:
Post a Comment