கடலூர் : மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்த அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குமராட்சி, காட்டுமன்னார்கோவில், கம்மாபுரம் பகுதிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன், எம்.எல்.ஏ., ரவிக்குமார், சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த கிராமங்களில் மருத்துவ முகாம்களை நடத்தி தேவைப்பட்டால் தடுப்பூசி போடுமாறும் அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
Source:dinamalar
No comments:
Post a Comment