காட்டுமன்னார்கோவில்:வீராணம் ஏரியில் இருந்து வெள்ள காலங்களில் வெள்ளாறு வழியாக தண்ணீர் வெளியேற்ற சேத்தியாத்தோப்பு அருகே பாழ்வாய்க்காலில் 6 கோடி ரூபாய் செலவில் ஷட்டருடன் கூடிய மதகு அமைக்கும் பணி நடந்து வருகிறது.கடலூர் மாவட்டம் வீராணம் ஏரிக்கு
நீர்வரத்து அதிகரிக்கும் மழை, வெள்ளக்காலங்களில் உபரி நீர் வெள்ளியங்கால் ஓடை வழியாக கொள்ளிடம் ஆற்றிலும், சேத்தியாத்தோப்பு அருகே பாழ்வாய்க்காலில் வீராணம் புதிய மதகு (வி.என்.எஸ்) வழியாக வெள்ளாற்றிலும் தண்ணீர் வெளியேற்றப்படும். இந்த இரு மதகுகள் வழியாக கடந்த காலங்களில் ஒரே சமயத்தில் வினாடிக்கு 5,000 கன அடி வரை தண்ணீர் வெளியேற்றப்படும். கடந்த 2005ம் ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பாழ்வாய்க்கால் மதகு சேதம் அடைந்தது.அதனை தொடர்ந்து புதிய மதகு கட்டி, இரண்டு கி.மீ., தூரம் கரைகள் பலப்படுத்த பொதுப்பணி துறை சார்பில் திட்டம் தயாரித்து 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
அதன்படி இரண்டு கி.மீ., தூரம் 33 மீட்டர் அகலத்தில் கரைகள் பலப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது. தற்போது மதகு அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. கடந்த காலங்களில் வினாடிக்கு 2,000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதற்@க சிரமம் ஏற்படும் நிலையில் தற்போது அமைக்கப்படும் மதகின் வழியாக ஒரே சமயத்தில் 6,190 கன அடி தண்ணீர் வெளியேற்ற முடியும் என பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தற்போது மழை துவங்கியுள்ள நிலையில் பணிகள் பாதிக்காத வகையில் மார்ச் மாதத்திற்குள் முடிக்க உதவி பொறியாளர் உமா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
Source: Dinamalar photos pno.news
November 06, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- நாஸ்-ஏர்: ரியாத்-கோழிக்கோடு 499/=ரியால்
- குழந்தைகளுக்கு வரும் 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து
- இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
- ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
- நஷ்டவாளர்கள் யார்?
- ரஷ்ய விமான நிலைய தீவிரவாத குண்டு வெடிப்பில் 31 பேர் பலி, 130 நபர்கள் காயம்
- நிகாப் அணிநத பெண்களுக்கு அபராதம்
- முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்
- முஸ்லிம்கள் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள்! அமெரிக்கா
- ஈரானில் விமான விபத்து: 70 பேர் பலி!

No comments:
Post a Comment