Islamic Widget

November 18, 2010

பரங்கிப்பேட்டையில் 5 மி.மீ., மழை பெய்தது.

கடலூர் : வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய தூரல் மழை பெய்தது. தொழுதூரில் அதிகபட்சமாக 140 மி.மீ., மழை பெய்தது.


வங்கக்கடலில் சென்னைக்கு அருகே 400 கி.மீ., தொலைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டிருந்தது. இதனால் தமிழக கடலோரப்பகுதி மற்றும் உள் மாவட்டங்களில் நேற்று பல இடங்களில் மழை பெய்தது. கடலூரில் இரவு முழுவதும் லேசான தூரல் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு மி.மீ., விவரம்:

கடலூர் 8.5 மி.மீ., பண்ருட்டி 25, வானமாதேவி 12, அண்ணாமலைநகர் 6, பரங்கிப்பேட்டை 5, புவனகிரி 6, சேத்தியாத்தோப்பு 8, லால்பேட்டை 16, ஸ்ரீமுஷ்ணம் 35, சிதம்பரம் 3, காட்டுமன்னார்கோவில் 10, விருத்தாசலம் 30, தொழுதூர் 140 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக தொழுதூரில் 140 மி.மீ., மழை பெய்துள்ளது.

 
Source:dinamalar photos: pno.news

No comments:

Post a Comment