Islamic Widget

November 25, 2010

உரிமை கோரப்படாத 10ஆம் வகுப்பு சான்றிதழ்களை அழிக்க முடிவு!

சென்னை: உரிமை கோரப்படாமல் இருக்கும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் உரிய மாணவர்கள் பெற்றுக்கொள்ளாவிடில் அவைகளை அழித்துவிட அரசு தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.


இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் சென்னை மண்டல துணை இயக்குனர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் வெவ்வேறு ஆண்டுகளில் தனி தேர்வர்களாக பத்தாம் வகுப்பு தேர்வெழுதியுள்ள நிலையில் அவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் இன்னமும் வாங்கப் படாமல் உள்ளன. கடந்த 2006 , 2007ம் ஆண்டு வரை உள்ள மதிப்பெண் சான்றிதழ்கள் உரிமை கோரப் படாமல், சென்னை அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் உள்ளன.

மேற்கண்ட சான்றிதழ்களையும், 2006, 2007ம் ஆண்டு வரை தனி தேர்வு எழுத விண்ணப்பத் துடன் இணைத்து அனுப்பிய பழைய மதிப்பெண் பட்டியல்களையும் உடனடியாக அழித்துவிட அரசு தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது. மேலும் இதுவரை வாங்காத தனித் தேர்வர்களின் நலன் கருதி மதிப்பெண் சான்றிதழ்களை இன்று தொடங்கி அடுத்த இரண்டுமாத காலத்துக்குள் வாங்கி கொள்ள அவகாசம் அளிக்கப்படுகிறது. அதன்பின்னர், எந்த அறிவிப்புமின்றி அந்த மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட காலத்துக்குள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள விரும்பும் மாணவர்கள் உரிய ஆதாரத்துடன் 30 ரூபாய்க்கான அஞ்சல் தலை ஒட்டப்பட்ட உறையுடன், ‘‘அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குநர், சென்னை’’ என்ற முகவரிக்கு 2006, 2007 ம் ஆண்டுவரை தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பித்து சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், இனிவரும் காலங்களில் உரிமை கோரப்படாத சான்றுகள் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை பாதுகாக்கப்படும். அதன் பிறகு அழிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source:inneram

No comments:

Post a Comment