தமிழகத்தில் சிமெண்டின் விலை கடுமையாக உயர்ந்ததை அடுத்து பாகிஸ்தானில் இருந்து சிமெண்ட் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
சில கட்டுமான நிறுவனங்கள் சேர்ந்து பாகிஸ்தானில் இருந்து சிமெண்டை இறக்குமதி செய்துள்ளதாகவும் முதல் தவணையாக 20 டன்களைக் கொண்ட 20 கண்டெய்னர் சிமெண்ட் பாகிஸ்தானில் இருந்து கொச்சி துறைமுகம் வந்தடைந்துள்ளதாகவும் இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் பிரகாஷ் சல்லா செய்தியாளர்களிடம் கூறினார்.
தமிழகத்தில் தயாரிக்கப்படும் சிமெண்டின் விலை மூடை ஒன்றுக்கு ரூ. 300 வரை விற்கப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிமெண்ட் மூடை ஒன்றுக்கு அனைத்துச் செலவுகளையும் சேர்த்து ரூ. 190 ஆகிறது என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் சிமெண்டிற்கான தேவை குறைவாக உள்ளதால் சிமெண்ட் தயாரிப்பை குறைத்துவிட்டதாக சிமெண்ட் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், கலைஞர் வீட்டு வசதித் திட்டம் செயல்படுத்தப்படுவதால் தேவை அதிகமாக உள்ளதால் தயாரிப்பாளர்கள் சிமெண்ட் விலையைத் தாங்கள் விரும்பியவாறு உயர்த்திக் கொண்டதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.
Source: inneram.com
No comments:
Post a Comment