காவித் தீவிரவாதம், இந்து தீவிரவாதம் எனக் கூறுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஆர்எஸ்எஸ் அமைப்பு, இந்துத்துவத்தையும், தீவிரவாதத்தையும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்த முடியாது எனக் கூறியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட விஜயதசமி நாளை ஒட்டி நடைபெற்ற பேரணியைப் பார்வையிட்டு உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், தீவிரவாதமும், இந்துத்துவமும் வேறுவேறானவை; அவற்றை ஒருபோதும் தொடர்புபடுத்த முடியாது என்றார்.
காவித் தீவிரவாதம் எனக் கூறுவது இந்துக்களின் வலிமையை பலவீனப்படுத்தவும், முஸ்லீம்களை சமாதானப்படுத்தவும் செய்யப்படும் முயற்சியாகும் என்றார் அவர்.
இந்துக்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஒருசில சம்பவங்களை வைத்து ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் குறைகூற முடியாது. அவ்வாறு கூறுவதில் நியாயமில்லை. இந்துக்கள் பொதுவாக தீவிரவாதத்தில் ஈடுபடுவதில்லை என மோகன் பாகவத் கூறினார்.
ராமர் கோயில் என்பது நமக்கு பெருமைவாய்ந்ததாகும். இந்தியாவில் நூற்றுக்கணக்கான ராமர் கோயில்கள் இருந்தாலும் ராமர் பிறந்த இடம் என்பதால் அயோத்தி முக்கியத்துவம் வாய்ந்தது. அது ஒரு தேசிய நினைவுச்சின்னம். புதிய கட்டடம் கட்டுவதற்காக அப்போதைய ஆட்சியாளர்களால் அது இடிக்கப்பட்டது எனத் தெரிவித்த பகவத், சமூக வேற்றுமைகளை மறந்து அனைவரும் கைகோர்க்க உயர்நீதிமன்ற தீர்ப்பு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது என்றார்.
dinamani
No comments:
Post a Comment