இந்தியாவின் மிகப்பெரும் பெட்ரோல் சில்லரை விற்பனையாளரான இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 72 பைசாக்கள் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.
இந்த விலையேற்றத்திற்குப் பின் டில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 52.55 ஆக இருக்கும் எனவும் மற்ற நகரங்களில் அந்தந்த மாநில அரசுகளின் வரி விதிப்பிற்கேற்ப வித்தியாசங்கள் இருக்கும் என்றும் ஐஓசி தகவல்கள் கூறுகின்றன.
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 70 காசுகளை வெள்ளியன்று உயர்த்தியது. இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமும் நாளை அல்லது நாளை மறுநாள் விலை உயர்வு அறிவிப்பை வெளியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source: inneram.com
No comments:
Post a Comment