October 17, 2010
அயோத்தி தீர்ப்பு: நிர்மோஹி அகாராவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு
அயோத்தி தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்டவாரியம் முடிவுசெய்திருப்பதைத் தொடர்ந்து நிர்மோஹி அகாராவும் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முஸ்லீம் தனிநபர் சட்டவாரியம் முடிவுசெய்திருப்பதால் இப்போதைக்கு உச்சநீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என நிர்மோஹி அகாராவின் செய்தித்தொடர்பாளர் மஹந்த் ராம் தாஸ் தெரிவித்தார்.
முஸ்லீம்களிடையே ஒரு குறிப்பிட்ட குழு அயோத்தி விவகாரத்தை முடித்துவிட ஆர்வப்படவில்லை என சந்தேகம் இருந்தது. அதுதான் இப்போது நடந்துள்ளது. அதே பாணியில் நாங்களும் முடிவு எடுக்க வேண்டியுள்ளதால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம் என அகாரா தலைவர் மஹந்த் பாஸ்கர தாஸ் சார்பில் பேசிய மஹந்த் ராம் தாஸ் தெரிவித்தார்.
dinamani
Labels:
இந்தியா
Subscribe to:
Post Comments (Atom)
- நஷ்டவாளர்கள் யார்?
- கார் மீது லாரி மோதி வாலிபர் பலி
- சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் அப்துல் அஸீஸ் மரணம்.
- இந்தியாவின் முதல் முஸ்லிம் தலைமைத் தேர்தல் கமிஷனராக எஸ்.ஒய்.குரேஷி இன்று பொறுப்பேற்கிறார்.
- விமானத்தை விட வேகமாகச் செல்லும் கார்
- தினமும் இஞ்சி சேர்த்தால் உடல் வலி குறைந்து விடும்
- 14ம் தேதி தமிழகம் வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி
- நூலகத்திற்கு வேலைவாய்ப்பு:விண்ணப்பங்கள் வரவேற்பு
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு நாளை முதல் நுழைவுச் சீட்டு வழங்கல்
No comments:
Post a Comment