கடலூர்: கூடுதல் விலைக்கு செங்கல் விற்றால் தயாரிப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக் கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டப் பணிகள் முன் னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் நடந் தது.
கூட்டத்தில் நத்தம் புறம்போக்கில் பட்டா இல்லாமல் குடியிருந்து வரும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு ஒரு வாரத்திற்குள் பட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேப்போல் ஆட்சேபணையற்ற புறம்போக்கில் குடியிருந்து வரும் பட்டா இல்லாத தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஒரு வார காலத்திற்குள் பட்டா வழங்க நடவடிக்கை வேண்டும். வீடு கட்டும் பணிகளுக் காக தமிழ்நாடு சிமென்ட் கார்பரேஷன் நிறுவனத்திடம் பேசி தேவையான சிமென்ட் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்பி, ஜல்லி, மணல் ஆகியவற்றில் உள்ள தடைகளை களைந்து கட்டுமானப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வகை செய்ய வேண்டும். மாவட்ட தொழில் மையம் மூலம் புதியதாக செங்கல் தொழில் செய்ய முன் வருபவர்களுக்கு 15 சதவீதம் மானியத்துடன் கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து அதன் அடிப்படையில் பெறப் பட்டுள்ள 25 மனுக்களை உடனடியாக வங்கிகள் கடன் வழங்க நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. இத்திட்டத்தில் 30 ஆயிரம் வீடுகள் கட்டும் பணி முனைப்புடன் நடைபெற்று வருவதால் சில செங்கல் உரிமையாளர்கள் அதிக விலைக்கு செங்கல் விற்பதாக புகார் வந்துள் ளது. ஒரு செங்கல் 3 அல் லது 3.50 ரூபாய்க்கு விற் பனை செய்ய வேண்டும். கூடுதல் விற்பனை செய்பவர்களிடம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Source: Dinamalar

No comments:
Post a Comment