புதுடெல்லி,அக்.26:அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ் செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ்குமார் ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸால் விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு முக்கிய சூத்திரதாரியாக செயல்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள இந்திரேஷ் குமாரிடம் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், தெளிவான தகவல்கள் கிடைத்தால் கைதுச் செய்யப்படுவார் எனவும் ஏ.டி.எஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு ஆலோசனை நடத்திய ஜெய்பூர் குஜராத்தி சமாஜம் விருந்தினர் மாளிகையில் இவர்கள் தங்கியிருந்ததற்கான ஆவணங்களை போலீஸ் பரிசோதித்து வருகிறது.
குண்டுவெடிப்பிற்காக கடந்த 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி இங்கு வைத்து இந்திரேஷ்குமார் பங்கேற்ற ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றுள்ளது. தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் சுவாமி அஸிமானந்தாவின் ஆசிரமத்தில் நடந்த ரகசிய கூட்டங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்தவேண்டிய இடங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டங்களிலும் இந்திரேஷ்குமாரின் பங்கேற்புக் குறித்த விசாரணையில் தற்பொழுது ஏ.டி.எஸ் இறங்கியுள்ளது.
குஜராத்தி சமாஜம் விருந்தினர் மாளிகையில் செக்-இன் பதிவேட்டில் முகவரி எழுதிய நபரின் கையெழுத்து இவ்வழக்கில் இன்னொரு குற்றவாளியான சுனில் ஜோஷியுடையதுதான் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மனோஜ்சிங் என்ற பெயரில்தான் சுனில் ஜோஷி அறையை புக் செய்துள்ளார். சுனில் ஜோஷியின் தேவாஸ் என்ற இடத்திலிலுள்ள வீட்டில் வைத்து கண்டெடுக்கப்பட்ட் டயரியிலிலுள்ள தகவல்களையும் ஏ.டி.எஸ் பரிசோதித்து வருகிறது. தேவாஸில் தனது வீட்டில் வைத்து சுனில் ஜோஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டிருந்தார்.
குண்டுவெடிப்பில் நேரடித் தொடர்புடைய சுனில் ஜோஷியை ரகசிய வெளியே கசியாமலிருக்க அவருடைய சக தோழர்களே கொலைச் செய்துள்ளனர் என்பதும் தெளிவாகியுள்ளது.
இந்தூரிலிருந்து சுனில் ஜோஷியும், லோகேஷ் சர்மாவும் சேர்ந்து வெடிக்குண்டு நிர்மாணிப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே மார்க்கெட்டிலிருந்துதான் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வைப்பதற்கான வெடிக்குண்டுகளும் வாங்கப்பட்டுள்ளன.
இந்திரேஷ் குமாருடன், தற்பொழுது மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையிலுள்ள ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கர்னல் புரோகித், பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோரையும் ஏ.டி.எஸ் விசாரணைச் செய்யும். அஸிமானந்தாவின் ஆசிரமத்தில் நடந்த ரகசியக் கூட்டத்தில் இருவரும் பங்கெடுத்திருந்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
October 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- புதுப்பள்ளி
- K-Tic ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் & கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' / K-Tic Conducted 'Educational Awareness Camp & Exchanges of Thoughts
- காதல் தொல்லை: +2 மாணவி தற்கொலை-ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு
- அன்னா ஹசாரே போராட்டம்: சங்பரிவார் மற்றும் அமெரிக்க ஆதரவு அம்பலம்
No comments:
Post a Comment