இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகும் மாருதி ஆல்டோ காருக்குப் போட்டியாக ஒரு புதிய மாடலை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
மும்பையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய மாடலான ‘ஏரியா’ அறிமுகம் செய்து வைத்துப் பேசிய அந்நிறுவனத்தின் கார்ல் பீட்டர் போர்ஸ்டர், நானோவிற்கும், இண்டிகாவிற்கும் இடையிலான
இடைவெளியை நிரப்ப ஒரு மாடல் வேண்டு்ம். அந்த அடிப்படையில் புதிய கார் ஒன்றை உருவாக்கிவருவதாகக் கூறியுள்ளார்.
800சிசி இயந்திரத்துடன் இயங்கும் இந்த வகை காருக்கான வடிவமைப்பு துவக்கியுள்ளதாகவும், அது முழுமையான உள்நாட்டு உற்பத்தியாக இருக்கும். புதிய மாடலிற்கான முக்கிய உபரிகளை தயாரித்தளிக்குமாறு உள்நாட்டு நிறுவனங்களை சிலவற்றைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கார்ல் பீட்டர் போர்ஸ்டர் தெரிவித்தார்.
டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ள ஏரியா மாடல், ரூ.13.18 முதல் ரூ.15.85 இலட்சம் விலை கொண்டதாகும். இது டோயோட்டா இன்னோவா, மஹிந்தரா க்சைலோ மாடல்களுக்கு போட்டியாகும்.
Source: webdunia
No comments:
Post a Comment