கடலூர் : மிளகாய் பொடி தூவி மோட்டார் பைக்கில் சென்ற தம்பதியரிடம் செயின் பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் முதுநகர் அடுத்த மணக்குப்பத்தைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (36). இவரது மனைவி கிருபாளினி. இருவரும் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மோட்டார் பைக் கில் பெரிய பிள்ளையார் மேடு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று வீடு திரும்பினர்.
மணக்குப்பம் ரயில்வே கேட் அருகே வந்த போது பின்னால் மோட்டார் பைக்கில் வேகமாக இரு மர்ம ஆசாமிகள் விநாயகமூர்த்தியின் மோட்டார் பைக்கை உரசியபடி சென்று அவர் மீது மிளகாய் பொடி தூவினர். பின்னர் பைக்கை எட்டி உதைத்து இருவரையும் கீழே தள்ளி கிருபாளிணி கழுத்தில் இருந்த நான்கு சவரன் செயினை அறுத்துச் சென்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக் குப் பதிந்து நகையை பறித் துச் சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
Source: Dinamalar
October 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் – இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ஸா !
- இறப்புச் செய்தி
- புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு !
- பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய பள்ளி ஆசிரியர் கைது!
- லைலத்துல் கத்ரின் சிறப்பு
- உதைபந்தாட்ட மோதல் 74 பேர் பரிதாப மரணம் 1000 பேர் காயம்..
- கடும் அவதியில் மக்கள் – நிவாரணக்காட்சிகள்
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- பக்கீம்ஜாத் குளம் தூர் மற்றும் பசுமைபடுத்த ஆலோசனை கூட்டம்
- பரங்கிப்பேட்டை: கிராவல் லாரிகள் தடை கோரி பொதுமக்கள் சாலை மறியல்
No comments:
Post a Comment