சென்னை: கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருக்கும் கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சி ஊராட்சி-நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளின் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி நேற்று ஆலோசனை நடத்தினார். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்த முதல்வர், திட்டப் பணிகளில் ஒவ்வொரு அதிகாரியும் சிறப்பு கவனம் செலுத்தி கட்டப்படும் வீடுகள் தரமானதாகவும், அவை விரைவாகவும் கட்டப்படுவதை உறுதி செய்து, பயனாளிகள் வசம் ஒப்படைக்கப்பட வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்திப் பயனாளிகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறும் பயனாளிகளுக்கான பட்டியல் தொகை வீடுகளின் முன்னேற்றத்துக்கு ஏற்றவாறு உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறிய அவர் அதிகாரிகள் இதைத் தொடர்ந்து கண்காணித்து வருவது அவசியம் என்றும் தெரிவித்தார்.
Source: inneram.com
October 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- நஷ்டவாளர்கள் யார்?
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
No comments:
Post a Comment