Islamic Widget

October 10, 2010

தீபாவளி பண்டிகை பாதுகாப்பு: சிதம்பரத்தில் 3 இடங்களில் "டவர்'

சிதம்பரம் : தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்து சீரமைப்பு மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக நகரில் மூன்று இடங்களில் போலீஸ் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் நகைக்கடை, துணிக்கடை உள்ளிட்ட வியாபார ஸ்தாபனங்களில் மக்கள் கூட் டம் வர துவங்கியுள்ளது. இந்நிலையில் கூட்டத்தில் திருட்டு நடப்பதை தவிர்ப் பது மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நேற்று சிதம்பரத்தில் டி.எஸ்.பி., சிவனேசன் தலைமையில் நடந்தது.

இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கண்ணபிரான், சப் இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகள், நகைக் கடை உரிமையாளர்கள், லாட்ஜ் உரிமையாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் தீபாவளி பண்டிகையின் போது விழிப்புடன் இருக்க வேண்டும், சந்தேகப்படும்படி யாரேனும் இருந் தால் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். லாட்ஜ்களில் சந்தேக நபர் கள் தங்கினால் தகவல் தரவேண்டும்.

பொதுமக்களுக்கும், போக்குவரத்திற் கும் இடையூறின்றி வியாபாரிகள் நடந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட ஆலோசனை, அறிவுரைகள் வழங்கப்பட்டன. அப்போது போலீஸ் தரப்பில், தீபாவளி பண் டிகை கூட்டத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொருட்டும், போக்குவரத்து சீரமைப்புக்காகவும், மேலவீதி, தெற்கு வீதி, பஸ் நிலையம் ஆகிய மூன்று இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

 
Source:  Dinamalar

No comments:

Post a Comment