சிதம்பரம் : வரும் 19ம் தேதி மாவட்ட அளவில் நடைபெறும் பந்த்தின் போது பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அனைத்து கட்சியினர் மற்றும் வர்த்தக சங்கத்தினர் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் நகர போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. டி.எஸ்.பி., சிவனேசன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் அறிவானந்தம், சப் இன்ஸ்பெக் டர்கள் மதிவாணன், வனஜா, மற்றும் அனைத்து எதிர்கட்சி பிரகர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் சிதம்பரம் பகுதியில் போலீஸ் ஆக்ட் நடைமுறையில் உள்ளதால் 5 பேருக்கு மேல் யாரும் கூட்டம் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்படுவது. இதன் காரணமாக பந்த் அன்று சாலை மறியல், ரயில் மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவு விடுதிகளை மூடச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. சட்டத்திற்கு புறம்பாக எந்த செயலிலும் ஈடுபட கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Source: Dinamalar
No comments:
Post a Comment