கடலூர் : பஸ் நிலையத்தில் நின்றிருந்த மூதாட்டிக்கு டீ வாங்கிக் கொடுத்து ஒன்பதரை சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் அடுத்த மாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி மனைவி உண்ணாமலை (75). இவர் கடந்த 14ம் தேதி காலை காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு ஊருக் குச் செல்ல பஸ் நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், உண்ணாமலையிடம் நான் உங்களது உறவினர் எனக் கூறி அவரை ஜவுளிக் கடைக்கு அழைத்துச் சென்று புடவை வாங்கிக் கொடுத்தார். பின்னர் டீ வாங்கிக் கொடுத்தார்.
அதனைக் குடித்த உண்ணாமலை சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார். கண்
விழித்து பார்த்தபோது அவர் அணிந்திருந்த 4 சவரன் செயின், 4 சவரன் வளையல், ஒரு சவரன் தோடு, மற்றும் அரை சவரன் மோதிரம் என மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒன்பதரை சரவன் நகைகள் காணவில்லை. அவருக்கு புடவை வாங்கிக் கொடுத்த பெண்ணையும் காணவில்லை. டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, நகைகளை திருடிச் சென்றிருப்பது அறிந்த அவர் கதறி அழுதார். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக் குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Source: Dinamalar
Nalla yosikirangapaa....!
ReplyDelete