பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் அக்டோபர் 1-ந்தேதி முதல் 2 மணி நேர மின்சார நிறுத்த நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக செயற் பொறியாளர் செல்வ சேகர் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் மின்வாரிய செயற்பொறியாளர் செல்வ சேகர் விடுத்துள்ள செய்தி குறிப்பு:
சிதம்பரம் கோட்டத்துக்கு உட்பட்ட துணை மின்நிலையங்களில் 1ம் தேதி முதல் மின் நிறுத்தம் செய்யப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட சிதம்பரம் நடராஜா பீடர் மூலம் மின் சப்ளை பெறும் மேலவீதி, கீழவீதி, வடக்கு வீதி, பதினாறு கால் மண்டப தெரு, கமலீஸ்வரன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் 10 மணிவரையிலும், அண்ணாமலைநகர், மாரியப்பா நகர் பகுதிகளில் மதியம் 12 மணிமுதல் 2 மணி வரையிலும், அம்மாபேட்டை, மணலூர், ஆகிய பகுதிகளிலும் மதியம் 2 மணிமுதல் 4 மணி வரையிலும், டூரிசம் பீடர் மூலம் மின் சப்ளை பெறும் பஸ் நிலையம், எஸ்.பி.கோயில் தெரு, சபாநாயகர் தெரு, தெற்கு வீதி ஆகிய பகுதிகளில் மாலை 4 மணிமுதல் 6 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும்.
காட்டுமன்னார்கோவில் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறப்படும் காட்டுமன்னார்கோவில், லால் பேட்டை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8 மணி முதல் 10 மணிவரையிலும், பு.முட்லூர் துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறப்படும் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறப்படும் பகுதிகளும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணிமுதல் 12 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Source: Dinakaran
October 04, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
- மக்காஹ்வில் மக்கள்கடல்
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் வழியாக குதித்த பயணி: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
No comments:
Post a Comment