பெங்களூர்: ராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலித், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு பெங்களூரில் நடந்தது.
அதில் பேசிய திருமாவளவன், எனக்கு என் மொழி என் தாயை போன்றது. அதே சமயம், மற்ற மொழி இழிவானது என்று பொருள் அல்ல. அதுவும் எனது தாய்மார்களை போன்றது. நாட்டில் உள்ள எந்த மொழியும் தாழ்வானது அல்ல.
நம்மிடம் ஒற்றுமை இல்லாவிட்டால் நமது உரிமைகள் பறிபோய்விடும்.ஒற்றுமை இல்லாததால் நமது நாடே முற்காலத்தில் வேறு ஒரு ஆதிக்கத்தின் கீழ் சென்றது. தலித் மக்கள், சிறுபான்மையின மக்கள், ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஒன்றுபட்டால் தான் அடக்குமுறையில் இருந்து நாம் எல்லாம் விடுபட முடியும்.
பதவிக்கோ, புகழுக்கோ ஆசைப்பட்டு இந்தக் கட்சியில் இணைய வேண்டாம். ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாக்க நீங்கள் போராட வேண்டும்.அப்படிப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் தலித் அரசியல் களம்.எனவே எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்கக்கூடாது.
அகில இந்திய அளவில் கிருஸ்தவர்கள், முஸ்லிம்கள், தலித் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்தால்,இவர்களில் ஒருவர் தான் நாட்டின் பிரதமராக வரமுடியும்.நம்மிடம் ஒற்றுமை இல்லாததால் நம்மால் அந்த பதவியை அடைய முடியவில்லை.
மக்கள் தொகையில் வெறும் 3சதவீதம் மட்டுமே உள்ள ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களில் ஒருவர் பிரதமர் ஆகிறார்,முக்கிய பதவிகளை கைப்பற்றுகிறார்கள். அவர்கள் நம்மை எல்லாம் அடக்கி ஆள்வது தான் அதற்குக் காரணம்.
தலித் மக்கள் வெறும் ஓட்டுபோடும் எந்திரங்களாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள்.
பாபர் மசூதி-ராமஜென்ம பூமி விவகாரத்தில்வழக்கு போட்ட மூவரும் சரிசமமாக நிலத்தை பங்கு போட்டு கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு கூறியுள்ளனர்.
இது சரியான தீர்ப்பல்ல. 10 பேர் வழக்கு போட்டிருந்தால் அதை 10 பேருக்கும் சரிசமமாக பிரித்து பங்கு போட்டு கொள்ள தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமா?.இந்த வழக்கில் நீதிமன்ற மரபே மீறப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்தத் தீர்ப்பு அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியது, வரவேற்கத்தக்க தீர்ப்பு என்று எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். நாட்டில் கலவரம் ஏற்படக்கூடாது என்பதற்காக இவ்வாறு அவர்கள் அறிக்கை வெளியிடுகிறார்கள்.
ஆனால், ராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமோ, ஆவணங்களோ கிடையாது. ஆனால் பாபர் ஒரு வரலாற்று நாயகன் என்பதை வரலாறு கூறுகிறது என்றார் திருமாவளவன்.
source: thatstamil
October 04, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- புதுப்பள்ளி
- நஷ்டவாளர்கள் யார்?
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- ஜூன் 4-ல் பஸ் நிறுத்த போராட்டம்: போக்குவரத்து தொழிலாளர் சங்கம் தீர்மானம்
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment